மனதினுள் நீயும்
உயிருக்குள் உன்
நினைவும்
உன் உணர்வுகளுடன்
என் உணர்வும்
இருக்கும் போது
உன்னை
மறப்பது
சாத்தியமா?
சாதனைதான்!!!
சிரிக்க மட்டுமே தெரிந்த
என்
இதயத்திற்கு
தவிக்கவும்
கற்று கொடுத்து விட்டாயே..
________________________________________________________
தினம் தினம்
ஒரு
கவிதை எழுதுகின்றேன்
அதில் உன் நினைவுகளை தான்
தினமும்
எழுதுகின்றேன்..
உன்னோடு வாழ்ந்த
காலங்களை விட
இன்று உன்
நினைவோடு
வாழ்ந்த
காலங்கள் அதிகமாகிறது
தேடினேன் தேடினேன்
என் ஜீவன்
தேயும் வரை
தேடினேன்..
ஆனாலும் -நீ
கிடைக்கவில்லை
உன்னை
தேடும் விழிகளுக்கு
தினமும் ஏமாற்றங்கள் தான்
கிடைக்கின்றன
உன்
பிரிவினால்__________________________________________________
அணனய மறுக்கும் என்னவளின் நினைவுகள்
நேற்றைய
என்னை
இன்றைய
நான்
வெல்லத்
துடிக்கிறேன்…
நாளைய
என்னிடம்
இன்றைய
நான்
தோற்கப்போவது
தெரிந்திருந்தும் !
தீப்பெட்டியென
நிலையாய்
உன்
நினைவு.
தீக்குச்சியாய்
உரசி
உரசி எரியும் மனது!
ஒருமுறைதான்
பிறந்தாய்
உன்னைப்
பார்க்கும்
ஒவ்வொரு
முறையும் பிறக்கிறேன்!!!!!!!!