"மறந்து விடு" என்றவள்..,
திரும்ப வந்தாள்
"திருமணம்" மறக்காமல்
வந்து விடு என்று..!!
**********************************
நீ.......
"தேவதையாய்" வளர்ந்தும்
என்ன புண்ணியம்..?
முத்தமென்றதும்
கஞ்சத்தனம்..!!
***********************************
உன்
"அழகு பறவைகளை"
எப்படி சிறை பிடித்தாய்
இந்த
சிறு தாவணியில்..?
************************************
இரண்டு மருத்துவர்கள்...
வந்தார்கள்..
பார்த்தார்கள்...
சென்றார்கள்..
கண்டு பிடிக்க முடியுமா
"காதல் சுகநோயை..?"
**********************************
குறும்செய்தி வராத போது
குறும்பி...
உன் நினைவு வராத நேரம்
என்ற அர்த்தம் அல்ல...?!
அதேபோல் குறும்செய்தியாக
"கவிதை" வந்தால்..
உன் நினைவு
"ராவண சிநேகம்"
போல பத்து மடங்கு பெருகி விட்டதென்று
அர்த்தம்...!
**************************************
எல்லாரும் இருக்கிறார்களே..?
முத்தமிடு..எல்லாரும் மறைந்து போவார்கள்..!
இத்தனை வெளிச்சத்திலா?
முத்தமிடு...
"இருட்டு இதம்" படரும் சுகமாய்..!!
வெட்கம் கொல்லுதே...?
முத்தமிடு...
வெட்கத்தை "வேட்க்கை" கொல்லுமே...?!
எங்கே தொடங்கட்டும்,,,?
முத்தமிடு..
தொடங்குவது எங்கோ இருக்கட்டும்...
"உயிர்" முடியும் வரை
முத்தமிடு..!!