God Murugan God Murugan
Home Submit Jokes, SMS etc. Login Signup

Madhiyin Tamil Kavithaigal

Madhiyin Tamil Kavithaigal is a collection of poems in Tamil (Tamil Font) written by Madhi.

மதியின் கவிதைகள்

!!!!! அனாதையாய் நான் !!!!!


வலிகள் மட்டுமே வாழ்க்கையாகி
போனது இங்கு எனக்கு மட்டும் ..
பிரிந்து இருக்கும் குடும்பம்
புரியாத உறவுகள் ...அறிந்து
கொள்ள முடியாத நட்புகள் என
ஆயிரம் ஆயிரம் பிரச்சனைகள் என்னுள் ..



இங்கு நான் சிரிப்பதும் சிரிக்க
வைப்பதும் வேஷங்கள் மட்டுமே...
அறியாதவயதில் நான் செய்த
சேட்டைகள் அனைத்தும் இன்று
விளைவுகளாய் என்னிடத்தில் ...


வருந்துவதை தவிர வேறு வழி
இல்லமால் வாழ செய்துவிட்டது சூழ்நிலை...
தினமொரு சிந்தனையில் சிக்கி
சிறுத்துகொண்டு போகிறது மனம்....
திசை அறிய முற்படும் போதெல்லாம்
திடீர் புயலாய் சிறு சிறு தடைகள் ..



அறியாத இத் தேசத்தில் சரியான
முடிவுகளை தேர்வு செய்வதில் இடியப்பமாய்
சிக்கல்..வழி துணைக்கும் வழி காட்டவும்
என் நிழல் தவிர யாருமில்லை இங்கு ....
என்னில் மீதமிருக்கும் நம்பிக்கைகளே
என்னை வழி நடத்துகிறது எப்போதும்....
அதுவும் விடைபெறும் சந்தர்பங்களில்
அனாதையாய் நான்...... !!
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
என்னை களவாட நினைக்கும்
உன் இதயத்துக்கு சொல் பெண்ணே .. நான் ஏற்கனவே களவு போய்விட்டேன் ...என்னவளிடத்தில் என்று
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
உண்மையாய் நடக்கும் ஒவ்வொரு சந்தர்பங்களிலும் தெரியாத காரணங்களுக்காய் உதறபடுகிறேன்..காரணங்களை தெரிந்து கொள்ள நினைக்கும் போது ...மனம் தானாகவே தெளிந்து விடுகிறது.
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
நம் உதடுகள் பேசாத வரை.. நமக்குள் மலர்ந்த காதல்... நாம் பேசிய மறு நிமிடமே மறைந்து விட்டதே .. மௌனம் தான் மேன்மையாக்குமோ காதலை
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
கண்ணுக்கு புலனாகும் உண்மைகளை ...திரையிட்டு மூடி மறைத்து முகவரி கொடுக்கும் காதல் ...திருப்பங்கள் பல வந்து திரை விலகும் போது....முகவரியுடன் முழுவதுமாய் தொலைத்து விடும்
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
கருவில் உயிர் கொடுத்து ... உயிருக்கு உருவம் கொடுத்து .. உருவத்துக்குஉன் உதிரமும் கொடுத்து என்னை உருவாகியவள் நீ .. இங்கு எனை படைத்ததும் நீயே... என்னை காத்தவளும் நீயே ..இதில் இல்லாத கடவுளை நான் எதற்கு வழிபட போகிறேன் ... அம்மா ..உன்னை என் கண்முன் வைத்து கொண்டு
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
உனக்குள் என்னை உருவாக்கி ..எனை உலகத்துக்கு அறிமுக படுத்திய உன்னை ...உதாசீனம் செய்தபோது கூட சுமைகளை சுகமாய் ஏற்று ...உன் இறுதிவரை என்னை உன் மனசெனும் கருவில் மறுபடியும் என்னை சுமந்தவள் நீ ....அம்மா
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
இடியாக பேசுகிறாய் .. மின்னல் பார்வையால் வெட்டுகிறாய் ... சற்று தாமதமாய் நான் வந்ததற்காக .. ஹா ஹா ஹா இப்பொழுது தான் காதல் மழை பொழிந்து நாமிருவரும் நனைந்து விட்டோமே ...இனி என்ன செய்ய முடியும் ,என்னை உன்னால்
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
உனக்குள் நான் இருக்கிறேன்... எனக்குள் நீ இருக்கிறாய் ... நம் இருவருக்குள்ளும் காதல் இருக்கிறது ... இன்னமும் எதற்காக காத்திருக்கிறோம் நாம்? நம் காதல் வாழ்வை தொடங்காமல்
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
குட்டி குட்டியாய் குறும்பு செய்யும் கண்கள்... பஞ்சு வண்ணத்தில் மென்மையாய் மேனி ... கெஞ்சுவதாய்பாசாங்கு செய்யும் செல்ல குரல் ... அன்பின் அதீதத்தல் அடிகடி தரும் ஸ்பரிசம் .. இப்படி எத்தனையாய் வர்ணித்தாலும்.... எண்ணில் அடங்காதது
என் பூஸ் குட்டியின் அழகு
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
காரணமற்ற காத்திருப்புக்களால் கரைந்து செல்கிறது வாழ்க்கை.. பின் கடந்து வந்த பாதைகளை கவனித்து பார்த்தால் மிஞ்சுவது ஏமாற்றம் மட்டுமே
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
காலையில் துயிலெழுப்பும்
அம்மாவின் குரல்... பாட சாலை
செல்லும் முன் அப்பா வாங்கித்தரும்
பணிஸ் .. காற்றை காலால் கிழித்து
செல்ல வைக்கும் என் சைக்கிள் ... பண்பான பாடசாலை .. பகுத்தறிவான ஆசிரியர் ...
நம்மை உயரவைக்கும் கல்விகள்... சாயந்தரமானதும் நண்பர்களுடன் கிரிகட் ..
இரவில் இனிய கதை சொல்லும் என்
செல்ல பாட்டி .. அன்பால் அடிபடும்
சகோதரிகள் .. கண்களால் கதை சொல்லிய
என் காதலி ... என்னை போலவே நான்
நேசிக்கும் என் பூனை குட்டி.. இத்தனையும்
இழந்து விட்டேன் இயந்திர வாழ்க்கையாலும் ஈழத்தில் பிறந்து விட்டதனாலும்
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
காலையில் துயிலெழுப்பும்
அம்மாவின் குரல்... பாட சாலை
செல்லும் முன் அப்பா வாங்கித்தரும்
பணிஸ் .. காற்றை காலால் கிழித்து
செல்ல வைக்கும் என் சைக்கிள் ... பண்பான பாடசாலை .. பகுத்தறிவான ஆசிரியர் ...
நம்மை உயரவைக்கும் கல்விகள்... சாயந்தரமானதும் நண்பர்களுடன் கிரிகட் ..
இரவில் இனிய கதை சொல்லும் என்
செல்ல பாட்டி .. அன்பால் அடிபடும்
சகோதரிகள் .. கண்களால் கதை சொல்லிய
என் காதலி ... என்னை போலவே நான்
நேசிக்கும் என் பூனை குட்டி.. இத்தனையும்
இழந்து விட்டேன் இயந்திர வாழ்க்கையாலும் ஈழத்தில் பிறந்து விட்டதனாலும்
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
உன்னையும் என்னையும் இணைத்தும் பிரித்தும் வேடிக்கை காட்டியது நானல்ல பெண்ணே... நம் மேல் நாம் கொண்ட காதல் தான் ... காதல் கொண்ட நீ அறியாயா? கடுவாளமிட்ட நினைவுகள் ஆனாலும் ...கட்டறுக்கும் காதல் கொண்ட மனது
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
எனக்கும் அவளுக்குமான சண்டைகளில் சாகடிக்க பட்டு... காரணம் நாமாய் இருக்க ...பழியை ஏற்று கொள்கிறது காதல்
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
அவள் நினைவெனும் கடலில் நீந்தி செல்கையில் சுழியாய் இழுக்கும் என் சூழ்நிலைகள் .. சுதாரிக்க நினைக்கும்போது சுழியில் போய்விடும் அவள் நினைவுகள் ..நினைவுகள் கூட நிரந்தரமாயில்லை எனக்குள்
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
விழிப்பதற்கே உறங்குகிறோம் ... வெற்றி பெறவே தோற்றுபோகிறோம்.. எழுவதற்காகவே வீழ்ச்சி அடைகிறோம்.. நம் ஒவ்வொரு சரிவுகளிலும் மனதை தளர விடாது ..வெற்றியை மட்டுமே வெறி கொண்டு நேசிப்போம்
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
இரவுகளின் தனிமையில் ... புது உறவினை எதிர்பார்த்து .. உறங்க விடாமல் உருகுலைக்குது என் விழிகள்
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
உன்னில் காதலை பரீட்ஷிட்தவன் நான்... எனக்குள் காதலும் உண்மையென போதித்தவள் நீ ...நான் உணராத போது என் காதலியானாய்... உணர்ந்த போது எனக்கு நீ யாரோ ஒருத்தியானாய்..தவறு இருவரிலும் தான் பெண்ணே... அறியாமல் பிழை செய்தவன் நான் .. அறிந்த பின்னும் பிழை செய்தவள் நீ
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
வள்ளுவன் குறளையும் ... ஒவையின் அருட் பாக்களையும் .. ஏன் பாரதியின் பாடலை கூட வைரமுத்து எதிர்கிறானே.. இவனென்ன படித்தவனா அந்த பாவலர்களை விட ? என்னை கேட்டால் ஒத்து கொள்வேன் ஆம் என்று .. வைரமுத்துவின் வைர வரிகளில் உதித்த ஒரு மர கவிதை போதுமே .. இதை நிரூபிக்க
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
ஆந்தையின் கண்களாய் அகல பார்வை பார்த்து .. எங்கு நான் ஒளிந்து கொண்டாலும் அறிந்து கொள்கிறாய் .. தெரியாமல் கேட்கிறேன்... எனக்குள் இதுவரை ஒன்றுமில்லை இருந்தும் எதற்காக இப்படி செய்கிறாய் நீ ? எதற்காக ஒளிந்து கொள்கிறேன் நான்
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
இதோ முடியும் தருவாயில் என் நினைவுகள் ..நிழல்களை விடுத்து நான் மட்டும் தனியாக செல்கிறேன் நிஜத்தை தேடி ...கவிதைகளாக
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
இன்று இணைந்திருக்கிறோம்
இனி பிரிக்க படுவோம்..
இனவெறி பிடித்த பெரியவர்களால் ..
நாம் சுவாசிப்பதெல்லாம் எங்கள்
இளமை காலங்களை மட்டுமே ...
முடிந்தால் புறந்தள்ளுவோம்
பெரியோரின் கொள்கைகளையும்
அவர்களின் மூட நம்பிக்கைகளையும் ...
நட்பை மட்டும் கொண்ட
நல்லதொரு புது சமுதாயத்தை உருவாக்குவோம்
நமக்கு பின்னால் வரும் சந்ததியின்
பழிகளில் இருந்து நாம் மீள
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
என்னில் உன்னை காண எத்தனிக்கும் போதெல்லாம் ...தடுக்கிறது இன்னொரு தேவதையின் நினைவுகள் என்னுள் வந்து ... இதுவும் காதல் தான்... எனக்கு மட்டும்
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
மரணித்து போன நினைவுகள் மட்டும் தான்... எழுச்சியை தரும் விடுதலையில் மட்டுமல்ல காதலிலும் தான் .. காலம் கடந்து விட்டாலும் கூட
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
பழகி பாசம் காட்டுவது போல் பகல் வேஷம் போடுபவரை வரவேற்கும் இவ் உலகம் .. உருத்தெரியாமல் உடைத்து விடுகிறது.. உண்மையாய் இருப்பவர்களை
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
நண்பா... தேவையெனின் வருவர் முடிந்தவுடன் செல்வர் ..சுயநல மனிதர் வாழும் சுத்தமில்லாத பூமி இது ...சுட்டெரித்து விடும் சுத்தமாய் நீயிருந்தால் .. உன் வழியில் நீ போ ..உனக்கு இடமழியாத மடையர்களின் உணர்ச்சிக்கு நீயும் இடமளியாதே .. உன்னை நீயே மாற்று அவர்களை போல ...நீயும் முன்னேறுவாய் சுயநலமாய் இருந்தால்
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
நேற்று , இன்று உருவான மாற்றங்களே ... நாளையின் விடியலை நிர்மாணிக்கும் விதைகள் .. மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டியவை அல்ல ..அவை உருவாக்க பட வேண்டியவை
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
நித்தம் நித்தம் மாறிவரும் இந்த நிலையற்ற உலகில்.. இலத்திரனியல் வளர்ச்சியால் நிர்மூலமாக்க பட்ட நினைவுகள் மத்தியிலும் ...நினைவழியாமல் நித்தமும் ஏங்குது எனக்காய் அன்றும் இன்றும் என்றும்... என் தாய் மனம்
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
எல்லோரும் எனை கெட்டவன் என்பர் ... வருத்த படவில்லை நான் .. சொன்னவர்கள் என் பார்வையில் இருந்ததில்லை இதுவரை நல்லவர்களாய்
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
அடுக்கடுக்காய் எழுத தோன்றும் கவிதையின் கருக்களில் .. போட்டி போடுகின்றன.. காதலும் ,நட்பின் நய வஞ்சகமும், நாடையே காட்டி கொடுத்து பெற்ற தாயை விற்று பிழைத்தது போன்ற கருணா பிள்ளையான் போன்றவர்களின் துரோகமும்
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
நித்தம் நித்தம் என் முகம் காட்டும் .. சற்று நினைவுகளை உள்வாங்கி உற்று பார்த்தால்... என் உருவில் உன்னை காட்டுது தந்தையே ...என் புலம்பெயர் குளியலறை கண்ணாடி
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
அன்பை தவிர வேறு அடையாளம் எதுவுமில்லை என் அம்மாவுக்கு..பருவ வயதிலும் பண்போடு பகுத்தறிவை பக்குவமாக ஊட்டியவள் .. இன்று நெடுந்தூரம் பிரிந்து வாழ்கிறேன் ..இருந்தும் என் நிழலின் அசைவை நித்தம் கணித்து நிஜமாய் சொல்வாள் என் அன்னை...என் ஒவ்வொரு கனவுகளிலும் நினைவுகளிலும் நான் காண்பதும் அவளைத்தான் ..
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
வாசிக்கும் பழக்கம் மட்டுமே கொண்டிருந்த எனக்குள் ... எழுதும் ஆற்றலை அறிமுகம் செய்தவள் நீ .. அதனால் தானோ எழுத நினைக்கும் போதெல்லாம் ..எண்ணங்களாய் வந்து நிற்கிறாய் என் வார்த்தைகளுக்கு உரிமை கோர
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
உன்னை காணும் போதெல்லாம் தோன்றும் வார்த்தைகளை ..சின்ன சின்ன வரிகளாய் கோர்கையில் ...வனப்பாய் வருகிறது காதல் ..கவிதைகளாக
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
என்று உன்னை நிலவுக்கு உவமித்தேனோ....அன்றிலிருந்து தேயும் போது ரணங்களாய்....வளரும்போது ஊடலாய் ...உன் நினைவுகளின் உருமாற்றம் தொடர்கிறது எனக்குள்
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
அன்று நீயும் நானும் அனாவசியமாய் போட்ட குட்டி குட்டி சண்டைகள்... இருவேறுதிசையில் இருக்கும் நம்மை இணைத்து வைத்திருக்கிறது....இன்றும் இனிமையான நினைவுகளாய்
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
அந்தி காலமொன்றில் ..கறுத்து போன வானமாய் வளர்ந்து நின்ற மரங்களோடு கை பிணைந்து ... நீளமாய் உன் நினைவுகளை நெஞ்சில் சுமந்த படி நெடுந்தூரம் வெறித்து பார்கிறேன்.. தெரிவதெல்லாம் ..நமகிடையான பிரிவெனும் வெளிகள் மட்டுமே
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
அந்தி மாலை பொழுதொன்றில் .... மஞ்சள் வான கீற்றுகளால் அலங்கரிக்க பட்ட அந்த கருநீல கடற்கரை ஓரத்தில் ...தக தகவென மின்னும் தங்க மணலில் ...செக்க செவேலென மறையும் ...செந்நிற சூரியானாய் நீ
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
உன் மேல் மழை கொள்ளும் காதலை.. ஏன் குடை பிடித்து தடுக்கிறாய் பெண்ணே .. நீ எப்போதும் இப்படிதான் .. உன்னை விரும்புபவரை விரும்ப மாட்டாய் போல
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
நீளமாய் பரந்து விரிந்திருந்த அந்த நீல ஆகாயத்தையும் .. நம்மை இடையில் நிறுத்தி அகலாமாய் அங்கிருந்த மரங்களையும் ...அடுக்கடுக்காய் விழித்து கவிதைகளை அள்ளி வீசுகிறாய் ...ஏனோ இயல்பாகவே இயற்கையை ரசிக்க தெரிந்த என்னுள் ..அன்று அங்கு புலபட்டதெல்லாம்... என் அருகிலிருந்த நீ என்ற ஒற்றை கவிதை மட்டும்தான் பெண்ணே
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
துளையிட்ட மூங்கிலில் புகுந்த காற்று இசையாய் வெளிவருமே ..அது போல பெண்ணே ....உன் நினைவுகள் என்னை துளைத்து வெளிவருது காதலாக
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
உன் இதழ்களால் நிரப்ப பட்ட ...மூச்சு காற்றை உயிராய் கொண்டு .... வானமெல்லாம் பறந்து திரியும் பலூனாய் ஆகிறேன் ...ஆயுள் குறைவென்பதை அறியாது
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
கடந்து போன நினைவுகளை
மீட்டு பார்க்கையில் .. மிஞ்சி நிற்பதெல்லாம் ஏமாற்றங்களும் இயலாமையின் பெருமூச்சுக்களுமே
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
விண்ணை தாண்டி நீ வருவாய் வருவாயென காத்திருந்து களைத்து போய்... உழவன்... வயலுக்கு நீர் பாய்ச்சி முடிகையில்... சோவென வந்து நிற்கிறாய் மழையே.. நீ சொல்லாமல்
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
அசலில் இருந்து எடுக்கப்படும் நகலாய் இன்று தமிழ் சினிமா.... நகல் கூட நன்றாகத்தான் இருக்கிறது ...அசல் போல
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
நீண்டு செல்லும் நம் நினைவுகளை நெஞ்சில் நிறுத்தினாலும்... கண்ணுகழகாய்
காட்சியாய் மாறி நிற்கும் நினைவுகள் ..புகைப்படங்களாய்
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
சூரியனாய் நீ.... மழை தூறலாய் நான் ... இணைந்த போது.. வானவில்லாய் நம் காதல்
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
அன்று வேப்ப மர நிழலில் வெயிலுகாய் பயந்து... வேர்வை வழிய ஒதுங்கியபடி எதிர்பார்த்த அந்த குளிர்... இன்று எதிர்பாராமலே கொல்லுது இங்கு தினமும் ..இன்று என் தேவை அந்த வேப்ப மர நிழலும் வேர்வை வரசெய்யும் அந்த வெயிலும்தான்
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
துள்ளி துள்ளி அங்குமிங்குமாய் உருண்டோடி விளையாட்டு காட்டுது உருளை பந்து.. அநாதை சிறுவனுக்கு உலகமாய்
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
கொடியில் துவைத்து காய போட்டு காற்றில் அசைந்தாடும் துணிகளாய் ..இன்று என் மனம் ... கறைகள் கழண்டு விட்டதனால்
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
நீ கடித்து சுவைத்து சொன்ன அந்த குச்சி ஐஸின் குளிராய் ...சிலிர்க்குது என் மனம் ..அந்த நினைவுகளை இன்று அசைபோடுகையில்
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
பெற்ற தாய் .. வளர்த்த தகப்பன் .. ஆசையாய் சகோதரர்கள் ... அன்பான உறவுகள் என அனைவரும் வந்து போகின்றனர் என் நினைவில் ..நீ என்னை காதலிக்கிறாய் என்றதும்.. என்னையும் உன்னையும் இணைந்து ..நம் உற்றோர் அனைவரையும் பிரித்து விட்டால்
அதுதான் காதலா ?
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
பசுமை நிறைந்த அடர் காடு .. நீயும் நானும் வசிக்க மட்டுமே அழகான ஒரு வீடு ...நீந்தி விளையாட நீரருவுகள்... கேட்டு மகிழ கருங்குயில் கானங்கள் ... நித்தம் உணவாய் இனிய கனிகள் .. நீண்டு செல்லும் நம்மிருவர் உறவுகள் ..இச்சையின்றி பயணம் செய்யும் நம் இதயத்தின் நினைவுகள் .. தினம்தினம் இனிதாய் போகுது நம் காதல் வாழ்வு கனவில்
Submitted by mathirooban on 08-Feb-2010

மதியின் கவிதைகள்
தூரத்தில் இருக்கும் நம்மை நினைவுகளாய் அருகில் இணைத்து.. பிரியாவிடை கொடுக்கிறது காதல் ...நம் பிரிவுகளுக்கு
Submitted by mathirooban on 08-Feb-2010

Tamil

Sad Love Tamil Kavithaigal

Tamil Quotes

Feelings Kavithaigal

Tamil Kavithaigal

Amma Mother

Kadhal and Natpu

True Love

Short Tamil Poems

Vaalkai Thathuvam

Kavithai Collection

Tamil Love and Romantic Poetry

Kadhal

Pudhu Tamil Kavithaigal

Kavithai Mazhai

MY SWEETY

Tamil Kavithaikal in Tamil

Kavithaigal

Latest Tamil Poems

Pennin Kadhal

Kadhal Tholvi

Ean Intha Matram

Kadhalin Thunbam

Ennaval

Sad Kadhal Kavithaigal

Kathal Infactuation

Kavithaigal and Romantic Poems

Muthal Muththam (First Kiss) Tamil Kavithai

Funny C Plus Plus Program Written in Tamil

சிவபெருமான்

காதலுடன் கலை

Categories

English SMS And Text Messages

Fun Pages

God Murugan

Hindi SMS

Jokes

Tamil

Tamil Jokes

Tamil SMS

Telugu Jokes And SMS