Madhiyin Kavithaigal is a collection of poems in Tamil (Tamil Font) written by Madhi.
மதியின் கவிதைகள்
♥ ♥ இயல்பாய் செல்லும் வாழ்க்கையை ...இனிப்பாய் மாற்றுகிறது காதலும் நட்பும் ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ பருவ காலங்கள் போலவே மாற்றபடுகிறது.. காதல் ..காதல் செய்பவர்களால் ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ கடந்து போன நினைவுகளை நினைத்து கவலை கொள்வதை விட .. இருகின்ற இன்றைய மற்றும் நாளைய எதிர்காலம் பற்றி யோசித்து வாழுங்கள் .. இனியாவது இருக்கலாம் நன்றாக ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ அழகிய சோலை ... நாம் தினமும் பழகிய அதே சாலை என் முன்னே நீ .. உன் பின் நான் ..மனதில் அதே நட்புடன் நாம் ... நம் இருவர் பின்னால் உன் அப்பா .. வேறு ஒரு நினைப்போடு .. வளர்ந்து விட்டாயாம் நீ . காவல் செய்கிறார் உன்னை மட்டுமல்ல என்னையும் தான் ..வேடிக்கையாய் இருக்கிறது என்னுள் ...விபரீதம் தொடர்கிறது அவருள் ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ எதிர் சாலையில் உன்னை காணும்போதெல்லாம் ..உள்ளத்தில் தோன்றும் ..கவிதையல்ல உன்னை பெற்றவர்களின் மேல் கடுப்பு ... .. நாய்க்கு மேக்கப் போட்டு ஏன் நடுரோட்ல போக விட்டிருக்காங்க என்று ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ அடிகடி நிலைகுலைந்து போகிறது வாழ்க்கை...நடந்ததை நினைக்கையிலும் ...நடப்பதில் முடிவெடுப்பதில் தெளிவற்று போகையிலும் ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ நீயும்.. ..நானும் ...நம் நட்பும் சேர்ந்து போட்டி போடுகையில் ...உனக்கு நானும் எனக்கு நீயும் விட்டு கொடுக்கிறோம் ...இறுதியில் வென்றுவிடுகிறது நம் நட்பு ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ அழகை வைத்து சிலபேரை வேணுமானால் கவரலாம் ....அன்பை வைத்து பாருங்கள் அழகின்றியும் அடையலாம்.. பல பேரை ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ மேலும் பல முட்டாள்களை உருவாக்க ஒரு கோயிலை கட்டுவதை விட ... வளர இருக்கும் சமுதாயத்தை அறிவுள்ளதாக்க முடிந்தால்.. பாடசாலைகள் அமைப்போம் ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ என்னுள்ளே ஏதேதோ நடக்குது.. காரணம் கேட்டால் மனசு கதை கதையாய் சொல்லுது .. முயன்று மூளையை உபயோகித்து பார்த்தால்..முழுவதுமே ப்ரம்மையாய் இருக்குது ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ காசுக்காய் விலை போன கயவர்களையும் ...மண்ணுக்காய் மரணித்த மனிதர்களையும் இவ்வுலகம் என்றும் நினைத்திருக்கும் .. ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ கொட்டும் மேளத்தின் இசையெல்லாம் .. சாவிற்கு முழங்கும் பறையாய் ஒலிக்குது என் செவிகளில் .. உன்னை மணகோலத்தில் பார்த்த போது ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ துன்பம் உனக்கு ரொம்ப துயரம் தருகிறதா ?கவலை படாதே நீ அதற்கு துன்பம் கொடு ..வாழலாம் நீயும் இன்பமாக ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
நாம் பெற்ற உயர்வு என்பது ...எம்மிடம் உள்ள செல்வத்தால் பெறுவது அல்ல .. அன்பினாலும் பண்பினாலும் பிறர் நம்மை எடைபோடுவதை பொறுத்தது . ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ பெண்ணே உன்னை நான் காப்பாற்றும் போதெல்லாம் .. தீயாய் சுடுகிறாய் வார்த்தைகளாலே.. இருந்தும் மாறவில்லை என் அன்பு உன்மேல்.. என்னை மட்டுமல்ல நீ இந்த உலகத்தையே அறியாதவள் .. அறியும்போது அறிவாய் ..இந்த மதியின் அன்பை ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ சற்றுமுன் அடித்த புயலில் தூறிய மழை துளிகளாய்.. உன் நினைவுகள் மனதில் ..நீ நம் காதலை புதைத்து விட்டாலும் கூட ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ விண்ணை தாண்டி விழிக்க வைக்கிறாய் உன் விழிகளாலே..அன்பை காட்டி
அரவணைக்கிறாய் உன் அழகாலே..
காதல் என்று சொன்ன போது மட்டும் ஏனடி ...அண்ணா என்று சொல்லி என்னை புதைத்து விட்டாய் மண்ணுக்குள்ளே ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ காதலெனும் தேர் செய்து .. சாமியாய் என்னவள் உன்னை இருத்தி .. கவிதைகளை வடமாய் பிணைத்து ..பவனி வருகிறது நினைவுகள் மனதில்... அது ஒரு அழகிய நிலா காலமாய் ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ கண்கள் உன்னை தேடும்போதெல்லாம் கடிவாளம் போடுகிறது மனது .. கலிகால காதலை எண்ணி ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ பனிதுகள்களாய் தூறும் ..அழகிய என் நினைவுகளும் கனவுகளும்.. உருகி போய்விடுகிறது மனதில்...சிறு வெப்பம் தீண்டியதும் ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ வெயில் காலமாய் வறட்சியாய் போன என் தனிமையில் ... வெண்மையான பனிகாலமாய் சிலிர்ப்பு மனமெங்கும் .... நீ எனக்காய் வந்தவுடன் ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ அழகாய் காதலை சொல்கிறது பூவில் பனித்துளி .. அழகாய் காதல் செய்கிறது பூவோடு வண்டு ...இதில் எந்த காதல் சிறந்தது ?கொடுப்பதா ? பறிப்பதா ? ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ மழையில் நனைந்தது அவள் .. ஜலதோஷம் எனக்கு மட்டும் .. எனக்கு தெரிந்த காதல் இதுதான் ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ ஈருடலை ஓருயிராய் ஈர்த்து..உள்ளங்களால் இணைப்பது.. காதல் ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ உன்னை சுற்றும் என் காதல் நினைவுகள் மட்டுமே ..இங்கு கவிதையாய் எப்போதும் ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ ம் ... ஆண்டு ஆறு கடந்து விட்டது .. மாறிவிட்டோம் உருவங்களில் உறவுகளில் .. மாறாதது என் காதல் மட்டும் ..எனக்குள் ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ திருடிய என் இதயத்தை திரும்ப கேட்கையில்.. திருடிவிடுகிறாய் மனதை உன் விழிகளாலே .. இப்படி தான் தினமும் தோற்று போகிறேன்.. உன்னோடு மட்டும் ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ நிலையற்ற வாழ்விலும்...நினைவுகளால்... நிலை பெற துடிக்கிறது காதல்...நிஜத்தை அறியாமல் ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ நினைப்பது ஒன்றாய் நடப்பது ஒன்றாய் என் காதலில் .. கன்னத்தில் கேட்க முத்தத்தை உதட்டில் கொடுத்துவிட்டு போகிறாள் ...அமைதியாய் என்னவள் ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ தினம் தினம் என்னை அழகு படுத்துகிறது... உன் நினைவுகள் ...என் வீட்டு கண்ணாடியில் ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ தீவிரமாய் இருப்பதால் தீவிரவாதி என்றால் ...நானும் தீவிரவாதிதான்... காதலிலும் கவிதைகளிலும் ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ தேவதையாய் நீ வந்த போதே ..நான் தெரிந்திருக்க வேண்டும்... எனக்கு தெரியாமலே போய்விடுவாயென்று ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ சன நடமாட்டமற்ற வீதியாய் ..வெறிச்சோடி கிடக்கிறது மனது.. நிகழ்கால பிரிவுகளால் ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ நீண்டு செல்லும் அதிவேக சாலையாய் ...நினைவுகள் நீளமாய் செல்கிறது .. காதல் என்ற ஒற்றை சொல்லை அவள் காண்பித்ததும் ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ உயிரற்ற பொம்மை ...உறவாய் உயிராய்..எங்கள் புலம்பெயர் குழந்தைகளுக்கு ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ நான் விழித்து இருக்கிறேன் ...நீ என்னை விழித்திருக்கிறாய்... இருந்தும் விடியவில்லை பொழுது ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ காதல் நினைவுகளோடு ...வழி தேடி போகிறேன்... வார்த்தைகளாக கவிதைகளை நோக்கி ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ அதிகாலை அலாரத்துடன் ஆரம்பிக்கும் உன் நினைவுகள் ... உறங்கையிலும் சூழ்கிறது ...நித்தமும் கனவுகளாக ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ தனியாய் நடக்க தெரிந்தும்... தாயின் கரம் பிடித்து நடக்கிறது குழந்தை .. என் பார்வையில் ..நிஜ காதல் இதுதான் ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ தினசரி என் தூக்கம் கெடுத்து ...தூங்காமல் என்றும் அவள் நினைவுகள் ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ சத்தியமாய் எனக்குள் காதல் இல்லை .. என் பிரிவில் உன் விழிகள் சாட்சியாய் நீரை பொழியும் வரை ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ ஆண்களின் நட்பு உதை பந்து போல ... எவ்வளவு உதைத்தாலும் உடையாது .. பெண்களின் நட்பு கண்ணாடி போல அவர்களை போலவே நொறுங்கி விடுகிறது ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ ஆசையாய் அழைத்தால் வரும் பாட்டியை விட்டுவிட்டு... வராத காக்கைக்கு உணவு படைகின்றார்கள்...நம் சமுதாயத்தை சீர்திருத்தும் பெரியோர்கள் ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ என்னை எனக்கு அறிமுகம் செய்து விட்டு ... இன்று முகவரி தெரியாமல் நீ எங்கு ஒளிந்து விட்டாய் பெண்ணே ? ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ இதுவரை திண்ணையில் இருந்த தாத்தா ...இன்று வீட்டுக்குள் வருகிறார் ....புகைப்படமாய் ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ சுடும் என்று தெரிந்தும்.. தீயை
தீண்ட வைக்கும்... காதல் ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ உன் நினைவுகளும் எந்தன் நாய் குட்டி போல தான் .. எப்பொழுதும் என்னோடு ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ வெற்றியிலும் தோல்வியிலும் ..பழியை ஏற்று கொள்கிறது காதல் ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ சிறுக சிறுக வார்த்தைகளை வரிசையாய் கோர்த்து உருவாக்கிவிட்டேன் என் கவிதை மாலையை .. சூடி கொள்ள எவரும் இல்லாமல் வாடி போனது.. என் மனதைப்போல் ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ காரணம் கண்களாய் இருக்க .. வலிகளை ஏற்று கொள்கிறது மனது .. உன்னை பார்த்த நாள் முதலாய் ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ என் கண்ணுக்கும் மனதுக்கும் கருத்து வேறுபாடு ...உன்னை பார்க்க வேண்டுமென்று கண்களும்... தனக்கு வலிகளை அளிக்க வேண்டாமென மனதும் ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
மதியின் கவிதைகள்
♥ ♥ காதலியை அறிந்த எனக்கு... அவளை காதலிக்க தெரியவில்லை... யோசித்தேன் காரணமும் புரியவில்லை ♥ ♥
Submitted by mathirooban on 15-Feb-2010
|